போடி தாலுகா போலீஸாா் நேற்று (ஏப்.16) சிலமலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தங்கப்பாண்டி என்பவர் போலீஸாரை கண்டதும் ஓடினாா். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் ராணுவத் துப்பாக்கித் தோட்டா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் 15 வருடம் முன்பு ராணுவத்தில் வேலை செய்த ராஜதுரை என்பவரிடம் அதனை வாங்கியது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கப்பாண்டியை கைது செய்தனர்.