வீரபாண்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றங்கரை சீரமைக்கும் பணி
சீரமைக்கும் பணி;
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே.6 முதல் நடைபெறவுள்ளது. திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் நீராடி அங்கிருந்து தீர்த்தம் எடுத்தும், அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை போன்றவை எடுத்து செல்வது வழக்கம். எனவே பக்தர்களின் நலன் கருதி முல்லை பெரியாற்றங்கரையில் மண் கொட்டி சமதளப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.