ராசிங்க புரத்தில் நடந்து சென்றவர் மீது கார் மோதியதில் உயிரிழப்பு
விசாரணை;
போடி அருகே ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் நேற்று (ஏப்.16) அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக கார் ஒன்று இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.