வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் இரண்டு பேர் கைது

மங்கலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் இரண்டு பேர் கைது;

Update: 2025-04-17 14:02 GMT
மங்கலத்தை அடுத்த இடுவாய் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடப்பதாக மங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது தூத்துக்குடி பகுதியில் சேர்ந்த ஆனந்த் (வயது 45) மற்றும் நெல்லை பகுதியைச் சேர்ந்த பிரேமா (வயது 50) இருவரும் விபச்சாரம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆனந்த் மற்றும் பிரேமாவை மங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 35 வயது உள்ள பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Similar News