கொளந்தானூரில் பணியின் போது மயங்கி விழுந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு.
கொளந்தானூரில் பணியின் போது மயங்கி விழுந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு.;
கொளந்தானூரில் பணியின் போது மயங்கி விழுந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், பசுபதி பாளையம் செல்வ நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி வயது 38. இவர் கொளந்தானூர் பகுதியில் செயல்படும் தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல ஏப்ரல் 16ஆம் தேதி மதியம் 12 மணியளவில், வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த முத்துசாமியின் தந்தை சுந்தரம் வயது 55 என்பவர் அதிர்ச்சியடைந்ததோடு, இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த முத்துசாமியின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.