தே.மு.தி.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் நியமனம்
தே.மு.தி.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நியமனம்;
திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவராக இருந்த வழக்கறிஞர் கே.பன்னீர்செல்வத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் கே. பன்னீர் செல்வத்துக்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புதிய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு முதல் நிகழ்வாக உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.