மாணவிகள் விடுதியில் தீ தடுப்பு விழிப்புணர்வு
தாராபுரம் மாணவிகள் விடுதியில் தீ தடுப்பு விழிப்புணர்வு;
தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தாராபுரம் சி.எஸ்.ஐ. பள்ளி மாணவிகளுக்கு தாராபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா ஜெயசிம்ராவ் தலைமை தாங்கினார். விடுதியில் தீப்பிடித்தால் அருகில் உள்ள பொருள்களை வைத்து தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. இதில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.