நாகரசம்பட்டி அருகே டூவீலர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு.

நாகரசம்பட்டி அருகே டூவீலர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-04-18 02:11 GMT
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (27) தொழிலாளியான இவர் டூவீலரில் வேலம்பட்டி காவேரிப்பட்டணம் சாலையில் உள்ள காணன்குட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழோ கவிழ்ந்தது. இதில் டூவீலர் ஓட்டி சென்ற அசோக்குமார் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அசோக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை மெற்கொண்டு வருகிறார்கள்.

Similar News