சத்துணவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை அமர்விலும் எதுவும அறிவிக்காத தமிழக அரசு கண்டித்து சத்துணவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்;
கால முறை ஊதியம் , தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றம் . குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூபாய் 9000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை 95 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி எம் ராமு தலைமை வகித்தார் மாநில செயலாளர் ஜெசி . உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் ஜெசி கூறும் போது 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிற சத்துணவு ஊழியர்கள் ஓய்வூதியம் 9000 வழங்கிட வேண்டும் ஓய்வூதியம் ரூபாய் ஐந்து லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெற்று செல்லும்போது பணிக்கொடையாக வழங்குவதற்கு பதிலாக அவர்கள் இறந்த பொழுது தருவதாக தமிழக அரசு சொல்கிறது இதை எப்படி ஏற்க முடியும் மேலும் ' வெள்ளியன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை அமர்வின் போது சத்துணவு ஊழியர்களுக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது வேதனை அளிக்கிறது தமிழக அரசின் இந்த போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தலைநகரங்களில் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம் அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.