கோவை: பாதையில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி !

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அப்பாதையை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.;

Update: 2025-04-18 05:49 GMT
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அப்பாதையை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு வேலைகளுக்காக நாள்தோறும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரத்யேகமாக சாய்வுதளத்துடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பாதை தற்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிவருவதாகப் மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆட்சியர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகள், சர்கரநாற்காலியிலோ அல்லது துணையுடனோதான் இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்திருப்பதால், மிகவும் குறுகலான இடத்தின் வழியாகவும், சில சமயங்களில் சாலையின் வழியாகவும் செல்ல வேண்டியுள்ளது. அதனால் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக பாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்கவும், அவ்வாறு நிறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News