சங்கரன்கோவிலில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கிய அமைச்சர்
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கிய அமைச்சர்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள ரயில்வே பீட்டர் சாலையில் அந்தப் பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு திமுக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்,எஸ், சிவசங்கர் தலைமையில் அந்தப் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார். மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா, சங்கரன்கோவில் திமுக நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.