தமிழக முதல்வருக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி ஜங்புரா மதராஸி கேம்பில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்றி அவர்களின் வீடுகளை இடிக்க பாஜக தலைமையிலான டெல்லி மாநில அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.