திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஏப்ரல் 18) மாலை 4.30 மணியளவில் சந்தை முக்கு பகுதியில் வைத்து நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தினர். இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.