உத்தமபாளையம் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை விசாரணை
விசாரணை;
உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (71). இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த மனோகரன் நேற்று (ஏப்.17) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.