கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்

குளச்சல்;

Update: 2025-04-18 14:05 GMT
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் பாரதி தலைமையிலான குழுவினர் குளச்சல், கோடி முனை, ஆலஞ்சி போன்ற பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது குளச்சலில் இருந்து கருங்கல் செல்லும் சாலையை நோக்கி அதி வேகமாக வந்த கேரள பதிவு கொண்ட வாகனம்  ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.       ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக டிரைவர் ஓட்டிச் சென்றார். இதை அடுத்து துரத்திய பறக்கும் படை அதிகாரிகள் தெருவு கடை  என்ற பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.  டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு  தப்பி ஓடி விட்டார்.       தொடர்ந்து அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்த போது அதில் 1530 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அதிகாரிகள் மண்ணெண்ணெய் கைப்பற்றி இனயம் புத்தன்துறை கிடங்கிலும் வாகனத்தை கிள்ளியூர்  தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

Similar News