கிள்ளியூர் பகுதி நல்லூர் என்ற இடத்தை சேர்ந்தவர் புஷ்பலதா (49). இவர் காப்புக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியை. சம்பவ தினம் பள்ளி முடிந்து பைக்கில் வெட்டு மணி - புதுக்கடை சாலையில் உதச்சிக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கின் பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று பைக்கில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட புஷ்பலதா படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் அரசு பஸ்சை அஜாக்கிரதையாக ஒட்டியதாக மேலங்கலம் பகுதி டிரைவர் முருகன் (55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.