வேலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!
வேலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா இன்று வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே நடந்தது.;
வேலூர் மாவட்ட நிர்வாகம், நீதித்துறை மற்றும் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா இன்று வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே நடந்தது. இந்த விழாவிற்கு கோட்ட பொறியாளர் தனசேகரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை நீதிபதி கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.