இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேகம்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-04-18 19:45 GMT
பாஜக அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திண்டுக்கல் பேகம்பூர் காயிதே மில்லத் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அம்ஜா தலைமை வகித்தார் கிழக்கு மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா வரவேற்றார். மேற்கு மாவட்ட தலைவர் அஜ்மல் கான் முகமது சுலைமான் கிழக்கு மாவட்ட பொருளாளர் இமாம் அகமது உசேன் துணைச் செயலாளர் பக்ருதீன் அலி அகமது முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் தவ்பிக் உசேன் துணைச் செயலாளர் நசீர் உசேன் கண்டனம் முழக்கம் எழுப்பினர். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் எம் பி சச்சிதானந்தம் திண்டுக்கல் மேயர் இளமதி துணை மைய ராஜப்பா காங்கிரஸ் மாநகரத் தலைவர் துரை மணிகண்டன் சிபிஐ மாவட்ட செயலாளர் பிரபாகரன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஷேக் பரீத் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் பாபா, திராவிடர் கழக மாவட்ட தலைவர் வீரபாண்டியன், ஜமாத்துல்லா உலாமா, மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான் யூஜிபி, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேற்கு மாவட்ட செயலாளர் அலாவுதீன் நன்றி கூறினார்.

Similar News