மரித்த இயேசுவின் திருஉருவ சுருபம் தூம்பா பவனி

திண்டுக்கல் புனித வளனார் தேவாலயத்தில் மரித்த இயேசுவின் திருஉருவ சுருபம் தூம்பா பவனி நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு;

Update: 2025-04-18 19:49 GMT
தவக்காலத்தில் இறுதி நாளான இன்று, மாலை அணிந்து விரதம் மேற்கொண்டவர்கள் நிறைவு செய்யும் தினமாகவும், இயேசு கிறிஸ்து மண்ணக வாழ்வின் இறுதி நாளில் துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் உயிர் துறந்த தினத்தை புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் புனித வளனார் தேவாலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலி நிறைவுபெற்ற பின்னர் மரித்த இயேசுவின் திருஉருவ சுருபம் தூம்பா பவனியில் வைத்து ஆலய வெளிப்புற வளாகத்தில் வலம் வந்து, பின்னர் தூம்பா ஆலையத்தில் இறைமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இறைமக்கள் ஜெபம் செய்தவாறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து (19.4.25) சனி இரவு 11 மணிக்கு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற உள்ளது. இதில் பங்கு தந்தை மரிய இஞ்ஞசி, உதவி பங்கு தந்தையர்கள், அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறை மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News