பட்டு வளர்ச்சித்துறையின் திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்;
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியில் பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டியில் விவசாயி திருமதி தமிழ்ச்செல்வி என்பவரது வேலன் இளம்புழு வளர்ப்பு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அக்கரைப்பட்டியில் விவசாயி திருமதி கோ.நந்தினி என்பவரது அன்னை இளம்புழு வளர்ப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தும்பலப்பட்டியில் விவசாயி ஜோதீஸ்வரி என்பவரது தோட்டத்தில் மல்பெரி இரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கணபதி மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்கள்.