கோவை: வி.இ. பரிஷத் ஆர்ப்பாட்டம் - போலீசாருடன் வாக்குவாதம் !

அமைச்சர் பொன்முடியை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல் துறையினருக்கும், விஸ்வஹித் பரிசு அமைப்பின் இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-04-19 04:43 GMT
அமைச்சர் பொன்முடியின் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை கண்டித்து விஷ்வ இந்து பரிஷத் சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விஷ்வ இந்து பரிஷத் தர்ம யாத்திரா தென் தமிழக பொறுப்பாளர் சிவலிங்கம் கண்டன உரையாற்ற முயன்றபோது, காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் பேச அனுமதி இல்லை எனக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆளும் கட்சியினருக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் அனுமதி அளிக்கும் காவல்துறை, தங்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News