குப்பை ஏற்றி செல்லும் பேட்டரி வாகனங்கள்

வாகனங்கள்;

Update: 2025-04-19 05:24 GMT
சின்னசேலம், பேரூராட்சி பகுதியில் நாள்தோறும் குப்பைகளை ஏற்றி செல்ல, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி சேர்மன் லாவண்யா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். செயல் அலுவலர் கணேசன், துணை சேர்மன் ராகேஷ் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை எழுத்தர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் காந்தி, சாரங்கன், சரவணன், பேபி சின்னதுரை, துப்புரவு ஆய்வாளர் ராஜா, ஊழியர்கள் சீனுவாசன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News