எம்எல்ஏவுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ வீட்டிற்கு சென்று அமைச்சர்கள் ஆறுதல் கூறினார்கள்.;
மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளபதி அவர்களின் தாயார் மாரியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார் . இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று (ஏப்.19) காலை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேரில் சென்று அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நேற்று மாலை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் ஆகியோர் தளபதியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.