திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணையில் இன்று (ஏப்ரல் 19) ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களுக்கு குடும்பத்தினருடன் குவிந்துள்ளனர். இந்த தலையணையில் தண்ணீரின் அளவு சிறிதளவு காணப்பட்டாலும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.