வெட்டப்பட்ட மாணவனுக்கு மாநில தலைவர் ஆறுதல்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
நெல்லை மாநகர பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சிகிச்சை பெற்று வரும் வெட்டப்பட்ட மாணவனை நேற்று (ஏப்ரல் 18) எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து மாணவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உடன் இருந்தனர்.