கோவை: விசைத்தறியாளர்கள் -கைது வதந்தியால் நள்ளிரவில் பதற்றம்
வசைத்தறியாளர்களில் நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் கைது செய்யப் போவதாக வதந்தி பரவியதால், 500க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் பந்தலில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கூலி உயர்வு கோரி விசைத்தறியாளர்கள் நடத்தி வரும் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடருந்து நீடிக்கிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் கைது செய்யப் போவதாக வதந்தி பரவியதால், 500க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் பந்தலில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் பதற்றமான சூழல் நிலவியது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 29 நாட்களாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, கருமத்தம்பட்டியில் 11 விசைத்தறியாளர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர் சங்கங்கள் கடையடைப்பு நடத்தியதுடன், பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.விசைத்தறியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காடா துணியில் கையெழுத்து பெறும் இயக்கத்தைத் தொடங்கினர். இதனிடையே, நள்ளிரவில் கைது வதந்தி பரவியதால் பதற்றமடைந்த விசைத்தறியாளர்கள், உண்ணாவிரதப் பந்தலை இரு சக்கர வாகனங்களால் அடைத்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்குப் பின் மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.