முத்தனூர் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து.
முத்தனூர் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து.;
முத்தனூர் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கீழ சபரி ராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் வயது 37. இவர் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில், நொய்யல்- வேலாயுதம்பாளையம் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் முத்தனூர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், கணேசபுரம், மாதா கோவில் தெருவை சேர்ந்த அன்வர் வயது 42 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி முருகானந்தம் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தத்தை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக முருகானந்தம் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அன்வர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.