உதயா நகரில் டூ வீலர்கள் மோதல். தாய்,மகன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
உதயா நகரில் டூ வீலர்கள் மோதல். தாய்,மகன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.;
உதயா நகரில் டூ வீலர்கள் மோதல். தாய்,மகன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் காளியப்பனுர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் விமல் வயது 26. இவரது தாயார் ராஜாமணி வயது 51. இவர்கள் இருவரும் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6:30-மணி அளவில், கரூர்- ஈரோடு சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர்.இவர்களது வாகனம் உதயா நகர் அருகே சென்ற போது, அதே சாலையில், கரூர், புலியூர் அருகே உள்ள பி.வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் வயது 47 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், விமல் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்ததில் தாய், மகன் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக விமல் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.