கோடைகால நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேகம்பூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் கோடைகால நீர்மோர் பந்தலை திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்தார்;

Update: 2025-04-19 13:22 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில், வெள்ளை விநாயகர் கோவில் எதிரிலும், நாகல் நகர் பேருந்து நிறுத்தம், பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகில் உட்பட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக கழக சார்பில் திண்டுக்கல் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கோடைகால நீர் மோர் பந்தலை திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர், ரோஸ் மில்க், ஆரஞ்சு ஜூஸ், நுங்கு, திராட்சை, வெள்ளரி, மற்றும் முலாம் பழம், கொய்யா உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இந்த நீர்மோர் பந்தலானது கோடை காலங்கள் முடியும் வரை பொதுமக்களின் கோடை வெயிலின் தாகத்தை தணித்து கொள்ளவும் உஷ்ணங்களை தணிக்கவும் இந்த ஏற்பாடானது மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் நீர்மோர் பந்தல் ஆனது திறக்கப்பட உள்ளதாகவும் பழனி சட்டமன்ற உறுப்பினர் கூறினார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் பிலால்உசேன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, மாநகரச் செயலாளர் ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் பகுதிச்செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News