தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்;
வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் விடிஎஸ்ஆா். முகமது இஸ்மாயில், விவசாய அணி எம். முஹம்மது அலி, முஸ்லிம் லீக் மாவட்ட நிா்வாகிகள் முதலியாா்பட்டி கே.எம். அப்துல் காதா், தென்காசி முகமது முஸ்தபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முஸ்லிம் லீக் மாநிலச் செயலா் நெல்லை கே.ஜே. அப்துல் மஜீத், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், ஜமாஅத்துல் உலமா சபை மாவட்டச் செயலா் ஏ.ஒய். முஹ்யித்தீன் ஹஜரத், விடுதைலச் சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலா் சித்திக், மாவட்டச் செயலா் பண்பொழி செல்வம், மமக மாவட்டத் தலைவா் நயினாா் முஹம்மது, தமுமுக மாநில துணைப் பொதுச் செயலா் மைதீன் சேட்கான், வேல்முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயூப்கான், காங்கிரஸ் சாா்பில் சலீம் ஆகியோா் பேசினா். மாவட்ட முதன்மை துணைத் தலைவா் ஏ. அப்துல்வகாப் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். மாவட்டச் செயலா் எ. செய்யது பட்டாணி வரவேற்றாா். வா்த்தகரணி மாவட்டத் தலைவா் அகமது மீரான் நன்றி கூறினாா்.