திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கீழ வடகரையை சேர்ந்த விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன் என்பவருக்கு சொந்தமான விலை நிலங்கள் பூலாங்குளம் பத்துக்காட்டில் உள்ளது. இவர் வாழைகளை பயிர் செய்துள்ளார். வாழைக்குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் விலை நிலங்களில் சுற்றும் கரடிகள் வாழைத்தார்களில் பழுத்த பழங்களை கீழே இழுத்து தின்றதால் சேதமடைந்துள்ளது.