காந்திகிராமம்-சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
காந்திகிராமம்-சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.;
காந்திகிராமம்-சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. கரூர் அடுத்த மன்மங்கலத்தில் செயல்பட்டு வரும் பிர்லா ஓபன் மைண்ட் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி சார்பில், கரூர் காந்திகிராமம் பகுதியில் "சாலை விதிகளை மதிப்போம்" "விழிப்புடன் இருப்போம்" என்பதை வலியுறுத்தி வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கரூர் நகர துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். உடன் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக டீசர்ட் வழங்கப்பட்டது. மேலும் வாக்கத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் நிர்வாக செயல் அலுவலர் விஜயகுமார் மற்றும் பள்ளியின் முதல்வர் விநால்டன், பள்ளி நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர். பொது மக்களுக்கு சாலை விதிகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.