கரூரில் மனைவியை தாக்கிய வழக்கில் பாஜக பொறுப்பாளர் சிறையில் அடைப்பு.
கரூரில் மனைவியை தாக்கிய வழக்கில் பாஜக பொறுப்பாளர் சிறையில் அடைப்பு.;
கரூரில் மனைவியை தாக்கிய வழக்கில் பாஜக பொறுப்பாளர் சிறையில் அடைப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில், முத்து நகரில் வசிப்பவர் தமிழ்ச்செல்வன் வயது 35. இவரது மனைவி சத்யா வயது 30. இவர்கள் திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் இருந்து வருகின்றனர். இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்ட நிலையில், தமிழ்ச்செல்வன் மனைவி சத்யாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சத்யா கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழ்ச்செல்வன் மீது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, கொலை மிரட்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுபுச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன் கரூர் மாவட்ட பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.