செங்குந்தபுரம்- இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்குந்தபுரம்- இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2025-04-20 07:08 GMT
செங்குந்தபுரம்- இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் JCI கரூர் டைமன்ட் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் JCI அமைப்பின் தலைவர் நாகராஜன், செயலாளர் மணிகண்டன், முக்கிய பொறுப்பாளர் சூரியகுமார், இதேபோல தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் மார்க்கெட்டிங் செயலாளர் மாதவன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமை முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர். இந்த முகாமில் இருபாலருக்குமான பொது மருத்துவம், மகளிர் மகப்பேறு மருத்துவம், குழந்தையின்மைக்கான சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் போன்ற மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று, தேவையானர்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினர். அறுவை சிகிச்சை தேவைப்படுபவருக்கு தேவையான பரிந்துரைகளையும் வழங்கினர். இந்த முகாமில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேவையான பரிசோதனைகளை செய்து கொண்டு, மருந்து, மாத்திரைகளை பெற்றுச் சென்றனர்.

Similar News