சிவந்தி ஆதித்தன் நினைவு தினம்

நாகர்கோவில்;

Update: 2025-04-20 07:42 GMT
தமிழ்நாடு டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சிவந்தி ஆதித்தனார் 12-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோயில் அபய கேந்திரா ஆதரவற்றோர் இல்லத்தில் சிவந்தி ஆதித்தன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மன்ற தலைவர் எஸ். பாரத் சிங் தலைமை தாங்கினார்,மாவட்ட கவுரவ ஆலோசகர் சுவாமி பத்மேந்திரா, மாவட்ட மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் ராஜாக்கமங்கலம் ஒன்றிய கிளை மன்ற தலைவர் கலைச்செல்வன், செயலாளர் எழிலரசு அபய கேந்திரா நிர்வாகி பொன் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர், பின்னர் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து மன்றம் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News