கன்னியாகுமரி-ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் தயார்

நாகர்கோவில்;

Update: 2025-04-20 07:55 GMT
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், நீண்ட தூர வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 823 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தெற்கு ரயில்வே தயார் செய்துள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கி.மீ. இதற்கான சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த ரயில்கள் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியது, ஆனால் இப்போது அது தாமதமாகிறது. முதற்கட்டமாக, நாட்டின் 10 இடங்களில் இருந்து வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளது. முதல் ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்படும். தெற்கு ரயில்வேயில் 16 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் முதலில் திருவனந்தபுரம் – மங்களூர் மார்க்கத்தில் இயக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மற்ற மண்டலங்களுடன் இணைக்கப்படும் ரயில்களில் திருவனந்தபுரம்-பெங்களூரு, கன்னியாகுமரி-ஸ்ரீநகர் (கொங்கன் வழித்தடம்) வழித்தடத்தில் ரயில்களை இயக்க வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் உள்ள ஐசிஎஃப்-ல் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சுகள் தயாராகி வருகின்றன.

Similar News