குளத்தூரில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு!
குளத்தூரில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்;
குளத்தூரில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையிலும், வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வரதராஜபெருமாள் முன்னிலையில் அதிமுகவினர், ஸ்டாலின் மாடல் அரசின் வெற்று விளம்பர பட்ஜெட் எனும் தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், திமுக அரசின் ஆட்சியில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் புழக்கம், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு தற்போது திமுகவினரால் நிறுத்தப்பட்ட நலத்திட்டங்கள், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப்பணியிடங்கள், கள்ளச்சாராய மரணம் என்பன போன்ற ஏராளமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நடைபெற்று வரும் அவலங்களை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கி வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் அமையும் கூட்டணிக்கு வாக்களிக்கும்படி, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். இதில் கழக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், மாரிமுத்து, விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.