கோவை: கூட்டணியை பற்றி கவலைப்பட தேவை இல்லை - நயினார்!
கோவை வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொண்டர்களிடையே உரையாற்றினார்.;
கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பேசும்போது, கூட்டணியை பற்றி, எத்தனை சீட் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், அது குறித்து யாரும், ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளங்களில் பதிவிட வேண்டாம். அது குறித்து நமது தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும். தி.மு.க விடம் இருந்து பா.ஜ.க தொண்டர்களை பாதுகாப்பது தான் என்னுடைய வேலை, சீட் எவ்வளவு, தொகுதி எது என்று சொல்வது எல்லாம் சர்தார்வல்ல பாய் படேல் (அமித்ஷா) வின் வேலை. அதனால் தயவு செய்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இப்போது அனைவரது போன்களும் டேப் செய்யப் படுகின்றன. எனது போனும் டேப் செய்யப்படுகிறது. யார் ? யார் ? பேசுகிறார்கள், என்னென்ன பேசுகிறார்கள், என்ன செய்யலாம் ? என்கின்ற அளவிற்கு தி.மு.க அரசு கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. எனவே அனைவரும் போனில் எச்சரிக்கையாக பேச வேண்டும். இந்த அளவிற்கு நம்மை கண்காணித்து கொண்டு இருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்து கட்சித் தேர்தலை நடத்தி, கூட்டணியை முடிவு செய்துவிட்டு சென்று உள்ளார். எனக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்கள் என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், நான் அடிக்கடி வந்து செல்வேன், நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். அதனால் நமக்கு மற்ற வேலையே இல்லை என பேசினார்.