சர்ச் கார்னர் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் போது விபத்து. ஒருவர் படுகாயம்.

சர்ச் கார்னர் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் போது விபத்து. ஒருவர் படுகாயம்.;

Update: 2025-04-20 09:38 GMT
சர்ச் கார்னர் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் போது விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மேற்கு நஞ்சை தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் வயது 31. இவர் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கரூரிலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் தெரசா சர்ச் கார்னர் அருகே சென்றபோது அதே சாலையில் பின்னால் வந்த நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே போதனூர், மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் வயது 42 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், தர்மராஜ் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த தர்மராஜனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தர்மராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News