பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக சுத்தமல்லி விலக்கில் கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் நீர்,குளிர்பானம் மற்றும் பழங்களுடன் கூடிய தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று (ஏப்ரல் 20) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் கலந்து கொண்டு பந்தலை திறந்து வைத்தார். இதில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.