புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது டாஸ் லாரி மோதி விபத்து.
புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது டாஸ் லாரி மோதி விபத்து.;
புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது டாஸ் லாரி மோதி விபத்து. ஈரோடு மாவட்டம், பவானி, காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் வயது 55. இவர் ஏப்ரல் 17ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர் - ஈரோடு சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அதே சாலையில் பின்னால் வந்த TN 25 BF 3214 என்ற எண் கொண்ட டிப்பர் லாரி, சொக்கலிங்கம் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சொக்கலிங்கத்தை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக சொக்கலிங்கம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிய டிப்பர் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல் துறையினர்.