நாகர்கோவிலை அதிர செய்த திமுக தொண்டர்கள் 

முன்னாள் அமைச்சருக்கு வரவேற்பு;

Update: 2025-04-20 10:58 GMT
தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சரும் கழக தணிக்கைக்குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜன் தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு நேற்று மாலை வருகை தந்தார். அவருக்கு  வடசேரி அண்ணாசிலை அருகில் பிரம்மாண்ட வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டு  பொறுப்பேற்றுக் கொண்ட சுரேஷ் ராஜனுக்கு குமரி மாவட்ட திமுக தொண்டர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டு  உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்  சுரேஷ் ராஜன் பேசியதாவது:- கழகத்தின் இதயமாய் மட்டுமல்ல,கழகத் தொண்டர்களின்,தமிழ்நாடு மக்களின் இதய துடிப்பாய் வாழும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  ஆணைக்கிணங்க என்னுடைய துறை சார்ந்த மக்கள் நலன் பணி தொடரும். அதே வேளையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் நமது கூட்டணி கட்சிகள் கைப்பற்ற நாம் அதி தீவிரமாக செயலாற்ற வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் உற்சாக உரையாற்றினார்.

Similar News