திருவேங்கடம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புரட்சியாளர் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டம் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு செயலாளர் எல்லாளன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய வன்னியரசு முஸ்லிம்களின் சொத்துக்களை கொள்ளை அடிப்பதற்காக இங்கு ஒரு கூட்டம் இருப்பதென்றால் அது பாஜக என்றும் அந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் நரேந்திர மோடி என்றும் குற்றம் சாட்டிய வன்னி அரசு, மற்ற கட்சிகளை விட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதி ஒழிப்பிற்காகவே போராடும் கட்சி என்றும், அதேபோல நான் இந்து என்று சொல்லி கொண்டு 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்களின் செருப்பால் அடிக்க வேண்டும் எனவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்றும் அண்ணாமலை வேறு கண்ட்ரோலில் புலம்புகிறார் எனவும் தெரிவித்தார், மேலும் சாதி ஒழிக்கப்படும் வேண்டுமானால் அம்பேத்கர் கொண்டு வந்த அகமண முறை மற்றும் புறமண முறை ஆகியவற்றில் புறம்பான முறை என்பது சட்டமாக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு சட்டம் ஆக்கினால் சாதி ஒழியும் என்றும், தமிழ்நாடு அரசு சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்தார். மதிமுக உட்கட்சி பூசலில் விடுதலை சிறுத்தைகள் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது எனவும் தெரிவித்தார்