வைரமடை செக்போஸ்ட் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து.

வைரமடை செக்போஸ்ட் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து.;

Update: 2025-04-20 11:29 GMT
வைரமடை செக்போஸ்ட் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. திருப்பூர் மாவட்டம் தொட்டிபாளையம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் வயது 58. இவர் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 5:30- மணி அளவில் கரூர்- கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் வைரமடை செக்போஸ்ட் அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட வேல்முருகனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த வேல்முருகனின் மகன் மோகன்ராஜ் வயது 31 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.

Similar News