தட்டாஞ்சாவடி: நீர் மற்றும் மோர் பந்தல் திறப்பு

தட்டாஞ்சாவடியில் நீர் மற்றும் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2025-04-20 16:38 GMT
பண்ருட்டி அப்துல்கலாம் மக்கள் நல மன்றம் சார்பில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தட்டாஞ்சாவடியில் நீர் மற்றும் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் தர்பூசணி வழங்கப்பட்டது. அப்துல் கலாம் மக்கள் நல மன்ற தலைவர் அப்துல் ரகுமான், துணைத் தலைவர் முகமது யூசுப், செயலாளர் யுவராஜ், பொருளாளர் தினேஷ், மூத்த நிர்வாகி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News