கோவை காந்திபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா முன்னிட்டு இரத்ததான முகாம் !
கோவை காந்திபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா முன்னிட்டு இரத்ததான முகாமை மேயர் துவங்கி வைத்தார்.;
மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இன்று காந்திபுரம், காட்டூர் இரங்கன் வீதியில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பகத்சிங் நினைவு இரத்ததான முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சிவசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் Ex.MLA, மாமன்ற உறுப்பினர்கள் சுமா விஜயகுமார், சாந்தி கழக நிர்வாகிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.