சின்னசேலம் பஸ் நிலையத்திலிருந்து நயினார்பாளையம் வழியாக எஸ்.நரையூர் வரையிலான, 27ஏ வழித்தடத்தில் மகளிருக்கான, கட்டணமில்லா புதிய பஸ்ைஸ, உதயசூரியன் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி அரசு பஸ் பணிமனை மேலாளர் அறிவண்ணன் முன்னிலை வகித்தார். சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், தி.மு.க., நகர செயலாளர் செந்தில், முன்னாள் செயலாளர் ஜனார்த்தனன், குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.