நுாற்றாண்டு நிறைவு விழா

விழா;

Update: 2025-04-21 03:16 GMT
கள்ளக்குறிச்சியில், கல்லை தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் வரதராசனாரின் நுாற்றாண்டு நிறைவு விழா நடந்தது. மும்பை தமிழ் இலெமூரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேங்கடபதி, முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் லயன்ஸ் மாவட்ட ஆளுனர் திருநாராயணன், முன்னாள் ஒன்றிய சேர்மன் அருணாசலம், நடராஜன், தங்கவேல் முன்னிலை வகித்தனர். கல்லைத் தமிழ்ச் சங்க புலவர் புகழேந்தி வரவேற்றார்.கவிஞர்கள் ஆசுகவி ஆராவமுதன், புலவர்கள் ஜெயராமன், மோகன், கோவிந்தராஜன், சிங்கார உதியன், தீர்த்தமலை ஆகியோர் தமிழ் சொற்பொழிவாற்றினர். கல்லைத் தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் வரதராசனார் நுாற்றாண்டு நிறைவு மலரை கவிஞர் ஜெயபாலன் வெளியிட்டார். முதல் பிரதியை புலவர்கள் மணி, விஜயகுமார், சவுந்தரராசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கவிஞர் சுரதா கால்லாடன், கோவை பேராசிரியர் நக்கீரர், இளமாறன் ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்விக்குழும தாளாளர் குமார், தியாகதுருகம் மவுண்ட்பார்க் கல்விக்குழும தாளாளர் மணிமாறன், சங்க சிறப்பு தலைவர் கோமுகி மணியன் ஆகியோர் புலவர் வரதராசனாரின் குறள் மனம் விருது மற்றும் பொற்கிழி வழங்கினர்.

Similar News