தலைமை பொறியாளர் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-04-21 03:19 GMT
கல்வராயன்மலையில் வெள்ளிமலை முதல் சின்ன திருப்பதி வரை உள்ள தார் சாலையை 98.50 கோடி ரூபாய் மதிப்பில் இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்த சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் தலைமை பொறியாளர் செந்தில், வெள்ளிமலை - சின்னதிருப்பதி சாலையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையில் உள்ள பழுதடைந்த பாலங்கள், உயர்மட்ட பாலங்கள், கல்வெர்ட்டுகள், தடுப்புச் சுவர்கள் ஆகியவை புதிதாக அமைய உள்ள இடங்களையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News