சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில், லட்சுமி நாராயணபெருமாள் கோவில் மற்றும் அய்யனார் கோவில்கள் உள்ளன. பழமை வாய்ந்த, 2 கோவில்களும் திருப்பணி முடிந்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்படாகி 8:00 மணிக்கு அய்யனார் கோவில் கும்பாபிேஷகமும், தொடர்ந்து 9:00 மணிக்கு லட்சுமி நாராயணபெருமாள் கோவிலிலும் கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.